உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது நாள் தீபாவளி வருகிறது. வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. திருப்பாற்கடலில் அவதரித்தவள். விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி. எனவே தான் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

நெய் தீபங்கள்: தீபாவளி அன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அகால மிருத்யு தோஷம் ஏற்படாதிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

அகல் விளக்கு தீபம்: அகல் விளக்கில் தீபம் ஏற்றினால், சக்தி தரும் என்பது ஐதிகம். அத்துடன் தீபசரஸ்வதி என்று 3 முறையும், தீப லட்சுமி என்று 3 முறையும், குல தெய்வத்தை நினைத்து 3 முறையும் ஆக மொத்தம் 9 முறை தீப்ததை நமஸ்காரம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !