திருப்பரங்குன்றம் கோயிலில் நேற்று 1008 சங்காபிஷேகம்
ADDED :5073 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உலக நன்மைக்காக நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. கோயில் திருவாச்சி மண்டபத்தில் நெல் மணிகளை பரப்பி 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டது. தொடர்ந்து முதல் கால யாக சாலை பூஜை, 2ம் கால யாகசாலை பூஜை நடந்தன.சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினர். சங்குகளில் இருந்த புனித நீர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட வெள்ளிக்குடங்களில் இருந்த புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.