உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் 12ல் சூரசம்ஹார விழா துவக்கம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் 12ல் சூரசம்ஹார விழா துவக்கம்

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில் வரும், 12ல் சூரசம்ஹார திருவிழா துவங்குகிறது. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா வரும், 12 மாலை, 6:00 மணிக்கு காப்புக்கட்டு உற்சவத் துடன் துவங்குகிறது. 13 காலை, 6:00 மணி முதல், கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடக்கிறது. மதியம், 2:30 மணிக்கு மயில் வாகனத்தில் சக்திவேல் ஏந்திய முருகன், சூரனை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 14 காலை, மயில் வாகனத்தில் கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலையில், தெய்வானையுடன் கந்தசாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் சூரசம்ஹார விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் அம்பிகாதேவி, செயல் அலுவலர் சுதா ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !