கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா துவக்கம்
ADDED :2547 days ago
புதுச்சேரி: புதுச்சேரி கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், சூரசம்ஹார திருவிழா நேற்று துவங்கியது. புதுச்சேரி சுப்பையா சாலையில், ரயில் நிலையம் அருகே கவுசிக பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 66ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹார திருவிழா நேற்று மாலை விநாயகர் பூஜையுடன் துவங்கியது.
11ம் தேதி பகல் 1:00 மணிக்கு யானைமுகன் சம்ஹாரமும், 12ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல், சிங்கமுகன் சம்ஹாரமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 13 ம் தேதி மாலை 8:00 மணிக்கு நடக்கிறது. 14ம் தேதி, காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 16 ம் தேதி இரவு தெருவடைச்சான், 17ம் தேதி கடல்தீர்த்தவாரியும், தொடர்ந்து முத்துப்பல்லக்கு, கார்த்திகை தீபம், வீரபாகு உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.