உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கையில் ஹனுமந்தராய கோயிலில் நாளை (நவம்.,11ல்) கும்பாபிஷேகம்

சிவகங்கையில் ஹனுமந்தராய கோயிலில் நாளை (நவம்.,11ல்) கும்பாபிஷேகம்

சிவகங்கை:சிவகங்கையில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஹனுமந்தராய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (நவம்., 11ல்) நடக்கிறது.

ராகவேந்திராவின் முற்பிறவியான வியாசராஜர் ராமேஸ்வரத் திற்கு தீர்த்த யாத்திரை மேற் கொண்டார். சிவகங்கையில் தங்கியபோது, அவரது கனவில் தோன்றிய அனுமன், தன்னை குளத்தை நோக்கி பிரதிஷ்டை செய்யுமாறு, கூறினார். இதையடுத்து செட்டியூரணி கரையில் ஹனுமந்தராய சுவாமியை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

சுவாமி பார்வையில் இருக்கும் குளம் இன்றும் நவம்., 10ல் முழுமையாக வற்றியது கிடை யாது. இக்கோயிலில் நாளை (நவம்., 11ல்) கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதேபோல் இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுக்ரஹ ஆஞ்சநேய சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதற்கான திருப்பணிகள் மே மாதம் துவங்கி நடந்தது. கும்பாபிஷேகத்தை யொட்டி யாக சாலைகள் அமைத்து நேற்று (நவம்., 9ல்) காலை 8:00 மணிக்கு கோபூஜை, கணபதி பூஜை நடந்தன. இரவு 7:30 மணிக்கு ஹோமங்கள், இன்று (நவம்., 10 ல்) காலை 8:00 மணிக்கு சுப்ரபாத சேவை, காலை 11:30க்கு வேதபாராயணம், த்வாரபாலக பூஜை, மாலை 6:00 க்கு ஹோமங்கள் நடக்கும். நாளை காலை 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !