கிணத்துக்கடவு அருகே, கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா
ADDED :2579 days ago
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே, கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நடந்தது.பொள்ளாச்சி அருகே அரசம்பாளையம், மன்றாம்பாளையம், மஞ்சம் பாளையம் ஆகிய கிராமங்களில், கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், நோன்பு சாட்டப் பட்டது. கடந்த, 7ம் தேதி அம்மன் ஊர்வலம் நடந்தது.நேற்று முன்தினம் (நவம்., 8ல்) மாவிளக்கு பூஜை மற்றும் குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று, குண்டம் திருவிழா நடந்தது.
மஞ்சம்பாளையத்தில் நடந்த குண்டம் திருவிழாவில், கங்கணம் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். அரசம்பாளையம், மன்றாம்பாளையத்தில் நடந்த குண்டம் திருவிழாக்களில், பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.