வாழ வைக்கும் வாழ்த்து
பணக்காரர் ஒருவர், அவ்வூர் பிரமுகர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, தன் வேலைக்காரனை அனுப்பி எல்ேலாரையும் வரும்படி அழைப்பு விடுத்தார். அதில் ஒருவர் “வயலில் வேலை இருக்கிறது. என்னால் வர முடியாது எனச் சொல்லி விடு,” என்றார். இன்னொருவர் “நான் புதிதாக மாடுகள் வாங்கியிருக்கிறேன். அவை சரியாக உழுகிறதா என பார்க்க வேண்டும். விருந்துக்கு வர வாய்ப்பில்லை,” என்றார். வேறொருவர், “எனக்கு இப்போது தான் திருமணம் நடந்துள்ளது. புது மனைவியை விட்டு வர முடியாது,” என்றார். இப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி தங்களை மன்னித்துக் கொள்ளும்படியும் தெரிவித்தனர்.பணக்காரருக்கு கோபம் வந்தது. நிலச்சுவான்தார்களையும், பிரபுக்களையும் விருந்துக்கு அழைத்தால் இப்படித் தான் நடக்கும் போல! என்னை அவமானப்படுத்தி விட்டார்களே! நீ ஏழைகளை அழைத்து வா! குறிப்பாக பார்வையற்றவர், மாற்றுத்திறனாளிகளை கூட்டி வா. அவர்கள் வயிறார சாப்பிடட்டும்” என்றார்.
இதன் மூலம் அறியலாகும் நீதி: ஏழைகளுக்கு விருந்து தருபவர்களே பிரச்னை இல்லாமல் இருக்கிறார்கள். முக்கியஸ்தர்களை அழைத்தால் அதில் பெரிய பணக்காரன், சிறிய பணக்காரன்...அவர்களை முன்வரிசையில் அமர வைப்பது என்றெல்லாம் பிரச்னை வரும். ஏழைகள் என்றால் எந்த இடத்திலும் சமத்துவமாக நடந்து கொள்வர். விருந்தளிப்பவரை வாழ்த்தியும் செல்வர். இந்த வாழ்த்து நம்மை வாழ வைக்கும்.