உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: இனிப்பு சீயம்

பிரசாதம் இது பிரமாதம்: இனிப்பு சீயம்

என்ன தேவை

பச்சரிசி        – 250 கிராம்
உளுந்தம் பருப்பு     – 200 கிராம்
பாசிப்பருப்பு         – 300 கிராம்
வெல்லம்         – 300 கிராம்
தேங்காய்         – 1 மூடி
நெய்         – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்         – 500 மி.லி.,
உப்பு         – சிறிதளவு

எப்படி செய்வது: பாசிப் பருப்பை வேக வைத்து வடித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டுத் தேங்காய்த் துருவலை வதக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்து கையளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடித்துக் கொள்ளவும். வெல்லப்பாகில் தேங்காய், பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்துக் கிளறி கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும். இதை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசி, உளுந்தை கழுவி ஊற வைத்து, உப்பு சேர்த்து பஜ்ஜிமாவு பதத்தில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்யை காய வைத்து, அதில் உருண்டைகளை மாவில் தோய்த்து வேக வைக்கவும்  பொன்னிறமாக வெந்ததும் எடுத்தால் இனிப்புச் சீயம் தயாராகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !