உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்

விழுப்புரத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்

விழுப்புரம்:விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது.

விழாவையொட்டி, நேற்று (நவம்., 13ல்) காலை 8:30 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு சிவபெருமானிடம் பட்டு வாங்குதல் மற்றும் இரவு 7:00 மணிக்கு அம்மனிடம் வேல் வாங்குதல் நடந்தது.இதையடுத்து, இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.

தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி வெற்றி வீதியுலா நடந்தது.இதேபோன்று, விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு பாலமுருகன் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !