கிருஷ்ணகிரியில் கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள்: திரளானோர் பங்கேற்பு
ADDED :2555 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று (நவம்., 13ல்) சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, அதிகாலை முருகனுக்கு, ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான, பெண்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். ஏற்பாடுகளை, ஆலய பரம்பரை அறங்காவலர் தலைவர் சுதர்சனம் மற்றும் ஆலய அறங்காவலர் ரவி குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.