உடுமலை பூளவாடி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2575 days ago
உடுமலை:உடுமலை, பூளவாடி ஸ்ரீபொம்மீஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்ம் இன்று (நவம்., 14ல்) நடக்கிறது.உடுமலை அருகே, பூளவாடியில் ஸ்ரீபொம்மீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த, 4ம் தேதி முகூர்த்தக்கால் போடப்பட்டது.தினமும் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேற்று, (நவம்., 13ல்) கணபதி பூஜை, யாகசாலை பூஜை மற்றும் முதற்கால யாகம், நடந்தது. இன்று (நவம்., 14ல்) காலை, 6:00 மணிக்கு இரண்டாம்கால யாக பூஜையும், 9:30 மணிக்கு வேத மங்கலங்கள் முழங்க ஸ்ரீபொம்மீஸ்வரி அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மற்றும் கோபுர கலசத்துக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 11:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.