உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் சத்யநாதசுவாமி கோவிலில், முருகப்பெருமான் வீதி உலா

காஞ்சிபுரம் சத்யநாதசுவாமி கோவிலில், முருகப்பெருமான் வீதி உலா

காஞ்சிபுரம்:கந்தசஷ்டி விழா நிறைவையொட்டி, திருக்காலிமேடு சத்யநாதசுவாமி கோவிலில், வள்ளி, தெய்வானையுடன், முருகப் பெருமான் வீதியுலா வந்தார்.காஞ்சிபுரம், திருக்காலி மேட்டில் உள்ள சத்யநாதசுவாமிபிரமராம்பிகை கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (நவம்., 13ல்), வள்ளி, தெய்வானை மற்றும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

நேற்று (நவம்., 14ல்) காலை சுவாமி வீதியுலா நடந்தது. இதில், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், திருக்காலிமேடு மற்றும் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வீதியுலா சென்று, கோவிலை மீண்டும் வந்தடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !