உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வால்பாறை சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 6ம் ஆண்டு கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு, நேற்று (நவம்., 14ல்) மாலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை, உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அதன்பின், திருமண சீர்வரிசை கொண்டு வரப்பட்டு, இரவு, 7:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வாணைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று (நவம்., 15ல்) காலை, 11:00 மணிக்கு அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !