பழநியில் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு, ரோப்கார், செல்ல பக்தர்கள் காத்திருப்பு
பழநி: பழநி கந்தசஷ்டிவிழா மற்றும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.
ரோப்கார், வின்ச்சில் செல்ல 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். பழநி மலைக் கோயிலில் நடைபெறும் ஒரே திருவிழாவான கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று (நவம்., 14ல்) திருக்கல்யாணம் நடந்தது.
ஏழு நாட்களாக சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் திருக் கல்யாணத்தை பார்த்தபின், விரதம் முடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் நேற்று (நவம்., 14ல்) உள்ளூர், வெளிமாநில பக்தர்கள் குவிந்தனர். உள்ளூர் பிரமுகர்கள், போலீசார், அரசியல் கட்சியினர் ஆதிக்கம் காரணமாக, வின்ச், ரோப்காரில் செல்வதற்கு மட்டும் அதிகபட்சமாக பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். திருக்கல்யாணம் முடிந்து அன்னதானம் முடித்து சஷ்டி விரதம் முடிக்க பக்தர்கள் மூன்று மணி நேரம்வரை வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசனம் வழியில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டை காணவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.