உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

கிருஷ்ணராயபுரத்தில், பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இதில், கடந்த வாரத்தில், கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. சுவாமிக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று (நவம்., 14ல்) மதியம், சூரசம்ஹார விழா முன்னிட்டு, பால், தயிர், இளநீர் முதலான திரவியங்களைக் கொண்டு, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜ அலங்காரம் செய்து, சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதில், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !