அரூர் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED :2549 days ago
அரூர்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம், நேற்று (நவம்., 18ல்) கோலாகலமாக நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் மேட்டுத்தெருவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் (நவம்., 17ல்) காலை மூலவர் விசேஷ பூஜைகள் நடந்தன.
நேற்று ( நவம்., 18ல்) காலை, 7:00 மணிக்கு, கோ பூஜை, துளசி பூஜை நடந்தது. தொடர்ந்து, பரமபத வாசல், நூதன நம்மாழ்வார் உற்சவர் பிரதிஷ்டை, நீராட்டம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரத் துடன் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.