உடுமலை விநாயகர் கோவிலில் சங்காபிஷேக வழிபாடு
ADDED :2741 days ago
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், விஸ்வநாத சுவாமிகளுக்கு சங்காபிஷேக வழிபாடு நடந்தது.கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில், சிவபெருமானுக்கு வலம்புரி சங்கு தீர்த்தங்களில், அபிஷேக பூஜை நடக்கிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, நேற்று 19ல்,, 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை நடந்தது.
விநாயகர் பூஜையுடன் வழிபாடு துவங்கியது. தொடர்ந்து, கலச பூஜை மற்றும் ஹோமமும் நடந்தது. விஸ்வநாத சுவாமிகளுக்கு, பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவங்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் 108 வலம்புரி சங்குகளிலும் தீர்த்த அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்துடன், விசாலாட்சி அம்மன் மற்றும் விஸ்வநாத சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.