கோவை ராமாயண யாத்திரை 420 பேர் பயணம்
ADDED :2550 days ago
கோவை:ராமாயண யாத்திரை ரயிலில், 420 பேர் புறப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, கோவா சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.ராமாயண காவியம் நிகழ்ந்த
இடங்களான மகாராஷ்டிர மாநிலம் நாசிக், நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கருதப்படும், ஜனக்புரி உள்ளிட்ட இடங்களுக்கு, தற்போது மதுரையில் இருந்து இயக்கப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலில், 420 பேர் செல்கின்றனர்.தொடர்ந்து, டிச.,14ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, கோவை வழியாக கர்நாடக ஆலயங்கள் அல்லது அதேநாளில், கோவா புறப்படும் சிறப்பு
ரயிலில் செல்ல, டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.
விபரங்களுக்கு, 9003140655, 9003140680 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி. டி.சி.,தெரிவித்துள்ளது.