இந்த வாரம் என்ன?
* நவ.17 கார்த்திகை 1: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல், விஷ்ணுபதி புண்ணிய காலம், மதுரை மீனாட்சியம்மன் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், திருவண்ணாமலை சிவன் கற்பக விருட்சம், அம்மன் காமதேனு வாகனம், கரிநாள்
* நவ.18 கார்த்திகை 2: வள்ளியூர் முருகன் கோயிலில் வள்ளி திருக்கல்யாணம், திருவண்ணாமலை சிவன் ரிஷப வாகனம், சுவாமிமலை முருகன் ஆட்டுக்கிடா வாகனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
* நவ.19 கார்த்திகை 3: கைசிக ஏகாதசி விரதம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கைசிக புராணப்படலம், கார்த்திகை முதல் சோம வாரம், சிவாலயங்களில் சங்காபிஷேகம், திருவண்ணா மலை சிவன் அறுபத்து மூவருடன் பவனி, நெல்லை நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி, கரிநாள்
* நவ.20 கார்த்திகை 4: துளசி விவாகம், பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 – 6:00 மணிக்குள் அபிஷேகம், திருவண்ணாமலை சிவன் தேர், திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்
* நவ.21 கார்த்திகை 5: திருவண்ணாமலை சிவன் குதிரை வாகனம், சுவாமிமலை முருகன் காமதேனு வாகனம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
* நவ.22 கார்த்திகை 6: பவுணர்மி விரதம், மதியம் 1:09 மணி முதல் கிரிவலம் ஆரம்பம், பிருந்தாவன பூஜை, பரணி தீபம், வைகானச தீபம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் லட்ச தீபம், திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்
* நவ.23 கார்த்திகை 7: திருக்கார்த்திகை தீபம், கணம்புல்ல நாயனார் குருபூஜை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம், திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர், தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாரியம்மன் நாராணயசுவாமி அலங்காரம், திருவண்ணாமலை சிவன் மகாதீபம்