நவபாஷாணத்தில் நீராட தடை கடலில் மூழ்கிய நவக்கிரகங்கள்
ADDED :2547 days ago
ராமநாதபுரம்: கடல் நீர்மட்டம் உயர்ந்ததால், தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்தில் நீராட சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் புகழ்பெற்ற நவபாஷாண நவக்கிரக கோவில் உள்ளது. கடலுக்குள் 20 மீ., உள்ளே நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமானோர், பரிகார பூஜைக்காக இங்கு வருவர். கடலில் குளித்து, நவக்கிரகங்களை சுற்றி வழிபடுவர். புதிய புயல் சின்னம் அறிவிப்பால் நேற்று முதல் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது.நவபாஷாண கோவிலில் கடல் நீர் மட்டம் உயர்வதும், குறைவதும் வழக்கம் தான் என்றாலும், நேற்று அதிகளவு உயர்ந்ததால், நவக்கிர சிலைகள் முற்றிலும் மூழ்கியது. இதனால் பக்தர்கள் புனித நீராடவும், நவக்கிரகங்களை தரிசிக்கவும் முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.