நடுவீரப்பட்டில் நந்தி பகவானுக்கு பிரதோஷ பூஜை
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர் மற்றும் மலையாண்டவர் ஆகிய கோவில்களில் நேற்று (நவம்., 20ல்) பிரதோஷ பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று (நவம்., 20ல்)மாலை 5:00 மணிக்கு விநாயகர், நந்தி, பிரதோஷ நாயகர், ஈஸ்வரர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பிரதோஷ நாயகர் ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மங்கலம்பேட்டைமாத்ருபுரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு நேற்று (நவம்., 20ல்) பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், மாலை 5:00 மணியளவில் நந்திபகவானுக்கு தீபாராதனை நடந்தது.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.