உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று(நவ.23) அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பின்பு அதிகாலை நான்கு மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் இதில் மூர்த்தி குருக்கள் கையில் ஏந்தி உள்ள பரணி தீபம்  மடக்கில்  ஜோதி ரூபமாய் வெளிபிரஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள்  அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரினசம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !