உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் சொக்கப்பனை: பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் சொக்கப்பனை: பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம்: கார்த்திகை தீப விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கப்பனைக்கு தீயிட்டு தீபம் ஏற்றினர். கார்த்திகை தீப விழாவான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு இரு சொக்கப்பனை மரம் நிறுவி அதனை சுற்றி பனை ஓலைகள் கட்டினர். பின் இரவு 8:15 மணிக்கு கோயில் குருக்கள் சொக்கபனைக்கு மகா தீபாராதனை நடத்தி தீயிட்டு தீபம் ஏற்றினார். பின் சொக்கப்பனையில் தீ மளமள பிடித்து பிரகாசமாக எரிந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோயில் இணை ஆணயைர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, கண்ணன், பலரும் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !