உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று (நவ.,23) கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நவரத்தின செங்கோலுடன் சுப்பிரமணியசுவாமி– தெய்வானை அருள்பாலித்தனர்.

இன்று காலை 8:30 மணிக்கு தேரோட்டம், மாலை 6:15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். 16 கால் மண்டபம் முன்பு சொக்கப்பான் தீப காட்சியும் நடக்கிறது. நவ.,24ல் சுவாமி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. தீப கொப்பரை மலைமேல் நாளை ஏற்றப்படும் கார்த்திகை தீபத்திற்காக 300 லிட்டர் நெய்யில் 150 மீட்டர் காடா துணியை திரியாக்கும் பணி நடக்கிறது. திருவண்ணாமலையிலிருந்து தீப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மலைமீது தீபத்துாண், தீப மண்டபம், நெல்லித் தோப்பு, காசி விஸ்வநாதர் கோயில் உட்பட முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !