சபரிமலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது போலீஸ்
சபரிமலை சபரிமலையில் போலீசார் விதித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்கின்றன. உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் கூட்ட மின்மை காரணமாக, போலீசார், தங்கள் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரத் துவங்கியுள்ளனர்.கடும் எதிர்ப்புகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த, மாநில அரசு, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சபரி மலையில் மண்டல சீசனில், போலீசார் வரலாறு காணாத கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருந்தனர்.
நிலக்கல்லில் இருந்து பம்பை வருவதற்கு, பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கு, சன்னி தானத்தில் வந்த பின், அங்கு தங்குவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும்விதித்திருந்தனர்.இதனால், முதன் முறையாக மண்டல சீசனில்,பக்தர்கள் இல்லாமல்சபரிமலை வெறிசோடியது. இது, போலீஸ் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் கட்டுப் பாடுகளை தளர்த்த, போலீசார் முன் வந்துள்ளனர். நிலக்கல்லில் இருந்து, இரவு, 8:00 மணிக்கு பின், பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன.தற்போது இது தளர்த்தப்பட்டு, 24 மணி நேரமும் இடைவிடாது பஸ்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு, 10:00 மணிக்கு பின்னும், பகலில், 12:00 மணிக்கு பின்னும், பம்பையில் இருந்து, பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது; இந்த தடையும் விலக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் மலையேறலாம்.சன்னிதானத்தில் இரவு தங்குவதில் உள்ளகட்டுப்பாடுகள் இன்னும் அகற்றப்படவில்லை.பெரிய நடைபந்தல், வாவர் நடை, மாளிகைப்புறம் முற்றம் ஆகிய இடங்களில், பக்தர்கள் தங்க விதிக்கப்பட்டுள்ள தடையை, படிப்படியாக அகற்ற, போலீசார் முடிவு செய்துள்ளனர்.ஆலோசனைஇதற்கிடையே, சபரிமலை விவகாரம், பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயனுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.