உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களுக்கு தகவல் மையங்கள் திறப்பு

சபரிமலை பக்தர்களுக்கு தகவல் மையங்கள் திறப்பு

சென்னை:தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும், அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத் துறை சார்பில், தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இது குறித்து, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக, சென்னை, தேனி, புளியரை, களியக்காவிளை ஆகிய இடங்களில், பயணத் தகவல் உள்ளிட்ட உதவிகளுக்கு, தகவல் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

வரும், ஜன., 31ம் தேதி வரை, இவை செயல்படும்.தகவல்களை பெற, 18000 4251757 என்ற, கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள், குமுளி செல்லாமல், கம்பம்மெட்டு வழியாக, மாற்றுப் பாதை ஒதுக்கப்பட்டு, ஒரு வழிப் பாதையாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.இதையடுத்து, இந்த ஆண்டு, தேனி- - குமுளி சாலையில் அமைந்துள்ள வீரபாண்டி, கவுமாரியம்மன் கோவிலில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை மாவட்டம், குற்றாலநாத சுவாமி கோவில், புளியரையில், பன்மொழி திருமலைக் குமாரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நெல்சேர் கட்டடம் முன், தகவல் மையங்கள் மைக்கப்பட்டுள்ளன.களியக்காவிளையில் உள்ள தகவல் மையம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அடிப்படை வசதிகள் செய்யப்பபட்டுள்ளன.சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, நிலக்கல் பகுதியை, அடிப்படை முகாமாக அமைக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நிலக்கல்லுக்கு அடுத்து, தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.நிலக்கல்லில் இருந்து பம்பாவிற்கு, தொடர்ச்சியான பஸ் சேவை வழங்க, கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !