சென்னிமலை செல்லாண்டியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :2544 days ago
சென்னிமலை: பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில், பொங்கல் விழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இக்கோவிலில் ஆண்டு தோறும், கார்த்திகை மாத முதலாவது வியாழக்கிழமை, பொங்கல் விழா நடக்கும். இதன்படி நடப்பாண்டு விழா கடந்த, 6ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், திருக்காவடி தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியுடன், நேற்று நடந்தது. திரளான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். ஆண், பெண் பக்தர்கள் வெள்ளை சீருடை அணிந்து, தரிசனம் செய்தனர். பொங்கல் விழா, நிறைவு நாள் நிகழ்ச்சியாக, இன்று மாலை, 6:00 மணிக்கு செல்லாண்டியம்மன் முத்துப் பல்லக்கில், திருவீதி உலா செல்கிறார்.