சோமனூர் கார்த்திகை விளக்கு: விற்பனை ஜோர்
ADDED :2544 days ago
சோமனூர்:கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, கருமத்தம்பட்டியில் அகல் விளக்குகள் விற்பனை ஜோராக நடந்தது.கார்த்திகை மாதத்தில், தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இன்று (நவம்., 23ல்) கார்த்திகை தீபம் என்பதால், வீடுகளில் மாலை நேரத்தில் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவர். கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதிகளில் விளக்குகள் விற்பனை களைகட்டியது. பல்வேறு வண்ணங்கள், புதுப்புது டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சிறிய அகல் விளக்கு ஒரு ரூபாய் முதல், பெரிய விளக்கு, 60 ரூபாய் வரை விற்கப்பட்டன. டிசைன் அகல் விளக்கு-10 ரூபாய், குத்து விளக்கு, லட்சுமிபாத விளக்கு, லட்சுமி விளக்கு, ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி ஸ்டாண்ட், துளசிமாட விளக்கு ஆகியவை, 30 ரூபாய்க்கும், ஐந்துமுக துண்டு விளக்கு-20 ரூபாய், தாமரை விளக்கு-15 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.