உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் இன்று (நவம்., 23ல்) கார்த்திகை தீப திருவிழா

சென்னையில் இன்று (நவம்., 23ல்) கார்த்திகை தீப திருவிழா

சென்னை : கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சிவாலயங்களில் இன்று(நவம்., 23ல்), சொக்கப்பனை கொளுத்தி தீப திருவிழா நடக்கிறது.கார்த்திகை மாத பவுர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்த நாளில், தமிழர்கள் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி, கார்த்திகை தீப திருவிழா கொண்டாடுவர்.இன்று (நவம்., 23ல்), கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உள்ளிட்ட சிவாலயங்களில், சொக்கப்பனை கொளுத்தி, தீபம் ஏற்றி கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில், தீபங்கள் ஏற்றி வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !