நெல்லிக்குப்பம் வாமனபுரீஸ்வரர் கோவிலில் நாளை (நவம்., 24ல்) ரோகிணி தீபம்
ADDED :2545 days ago
நெல்லிக்குப்பம்: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் நாளை (நவம்., 24ல்) ரோகிணி தீபம்ஏற்றப்படுகிறது.
நெல்லிக்குப்பம் அடுத்த திருமாணிக்குழியில் பழமையான வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலை உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம்.
திருவண்ணாமலையில் மூலவருக்கு பின்னால் இருக்கும் மலையில் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றும் விழா இன்று நடக்கிறது.ஆனால், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் பரணி நட்சத்திர தினத்தின் மறுநாள் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். இங்கு மூலவருக்கு முன்புறம் உள்ள மலையில் தீபம் ஏற்றவது சிறப்பாகும். திருமாணிக்குழி வாமன புரீஸ்வரர் கோவிலில் நாளை 24ம் தேதி மாலை ரோகிணி தீபம் ஏற்றபடுகிறது.