உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலைக்கு தீப திருவிழாவிற்கு கூடுதல் போலீஸ்

திருவண்ணாமலைக்கு தீப திருவிழாவிற்கு கூடுதல் போலீஸ்

கடலூர்: திருவண்ணாமலையில் இன்று (நவம்., 23ல்) நடைபெற உள்ள தீப திருவிழாவிற்கு கடலூர் மாவட்டத்திலிருந்து மேலும் 200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் இன்று தீப உற்வசம் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்படுகிறது. தீப திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட திருவண்ணாமலை க்கு போலீசார் அனுப்பப்படுவது வழக்கம்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 20ம் தேதி 400 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று (நவம்., 22ல்) 200 போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

மாவட்டத்திலிருந்து இதுவரை, கடலூர் எஸ்.பி., சரவணன் தலைமையில் 5 டி.எஸ்.பி.,கள்; 15 இன்ஸ்பெக்டர்கள், 50 சப் இன்ஸ்பெக்டர்கள்; ஆயுதப்படை போலீசார் 100 பேர் என மொத்தம் 600 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !