உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லாலாப்பேட்டையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

லாலாப்பேட்டையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கொடிக்கால் தெருவில், தீபத்திருநாளை முன்னிட்டு, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை, கொடிக்கால் தெருவில் மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த தொழிலாளர்கள், கார்த்திகை மாத தீபத் திரு நாளை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது: கார்த்திகை மாதத்தில், கோவில், வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். அதற்கு தேவையான அகல் விளக்குகள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இதில் ஒரு விளக்கு, ஒரு ரூபாய் முதல் விற்கப்படுகிறது. தயாரிக்கும் விளக்குகள் அனைத்தும் கரூர், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !