உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியனை சுட்டெரித்தவர்

சூரியனை சுட்டெரித்தவர்

திருருவண்ணாமலையைவலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் அதை பெரிதாக எடுக்கவில்லை. அவர் தினமும் உலகிலுள்ள எல்லா மலைகளின் மீதும் கதிர்களை வீசியபடி, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருவார்.

ஒரு முறை, அவர் திருவண்ணாமலையின் மீது, வழக்கமான அலட்சியத்துடன் சுட்டெரிக்கும் கதிர்களை வீசியபடி வந்து கொண்டிருந்தார். மிகுந்த வெப்பமுள்ள நெற்றிக்கண் உள்ள சிவன், அங்கு மலையாக எழுந்தருளியிருக்கும் விஷயம் அவருக்கு தெரியும். தன் அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்த, அதிக உஷ்ணத்தை
அண்ணாமலை மீது பாய்ச்ச வந்தது வினை!

தேர்சக்கரங்கள் வெடித்துச் சிதறின. தேர் சரிந்தது. குதிரைகள் உயிர் விட்டன. பிரம்மாவை நோக்கி, “பிரம்மனே! காலத்தின் இயக்கமே நின்று விட்டதே! இதென்ன சோதனை,” என சூரியன் கதறினான். அப்போது அசரீரி ஒலித்தது.“சூரியனே! நீ மற்ற மலைகளைப் போல் அண்ணாமலையை வெறும் கற்பாறையென நினையாதே. அங்கே சிவனே மலையாக இருக்கிறார். அங்கு செல்லும் போது மலையை வலம் செய்தபடிஒதுங்கிச் செல்ல வேண்டும். அந்த கிரிவலத்தால் உனக்கு நன்மையும் உண்டாகும்,” என்றது. சூரியனும் அண்ணாமலையாரிடம் மன்னிப்பு கேட்டு, இழந்த தேரையும், குதிரைகளையும் பெற்றான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !