புயலைத் தடுக்கும் தீபம்
திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால் புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புயல் போல துன்பங்கள் வந்தாலும், தீபதரிசனம் செய்தால் அது நீங்கிவிடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துகிறது. பச்சரிசி, வெல்லம், எள் சேர்த்த கொழுக்கட்டை, கார்த்திகை பொரி, வெல்லம் சேர்ந்த பொரி உருண்டை, அவல் ஆகியவை கார்த்திகை தீபநாளில் சுவாமிக்கு படைக்கும் நைவேத்யம். பெரிய சந்திரசேகரர், சின்ன சந்திரசேகரர், பக்தானுக்ரஹ மாஸ்கந்தர், பெரிய நாயகர், சின்ன நாயகர் ஆகிய பெயர்களில் உற்ஸவர்கள் இங்கு உள்ளனர் மாசி மாதம் முதல் ஐந்து நாள் அம்மன் சன்னதியில் சூரிய ஒளிபடும். தினமும் அம்மனின் முகத்தில் படும் ஒளி, சிறிது சிறிதாக பாதம் வரை இறங்கும். அண்ணாமலையாரின் ஆடைகள் உள்ள அறை வஸ்திர கொட்டடி, பொக்கிஷ அறை அருகிலுள்ளது. அண்ணாமலைகோயில் கோபுரங்கள் பற்றி ஆராய்ச்சி நுால் எழுதிய வெளிநாட்டவர் எம்.எச்.கிரேவ்லி.