கிள்ளை அடுத்த பின்னத்தூரில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
ADDED :2546 days ago
கிள்ளை: கிள்ளை அடுத்த பின்னத்தூர் ஸ்ரீபர்வதவர்த்தினி சமேத ராமநாதேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு மற்றும் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி நேற்று முன் தினம் (நவம்., 22ல்) இரவு முருகன், வள்ளி தேவசேனை மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
அதன் பின் நடந்த கார்த்திகை தீப வழிபாட்டில் சுற்றுப் பகுதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். இதே போன்று சுற்றுப்பகுதி கோவில்களில் கார்த்திகை தீப விழாவும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.