உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபா திருவிழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபா திருவிழா

கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதும் நேற்று, கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது. கரூர் பகுதி மக்கள், மாலை, 6:00 மணிக்கு வீடுகளில், மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்தனர். இரவு, 7:00 மணிக்கு, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !