உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை உற்சவம்

மாமல்லபுரம் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை உற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், திருமங்கையாழ்வார் சாற்றுமுறை உற்சவம் நடந்தது.

திருமங்கையாழ்வார், கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திர நாளில் பிறந்தார். அவரது திருமொழியில், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாளை, 20 பாசுரங்களில் போற்றியுள்ளார்.
இக்கோவிலில் வீற்றுள்ள அவருக்கு, அவரது பிறந்த நட்சத்திர நாளான நேற்று (நவம்., 23ல்), சாற்றுமுறை உற்சவம் நடந்தது.

தொடர்ந்து, வீதியுலா சென்று, கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சாற்றுமுறையைத் தொடர்ந்து, அவருக்கு, பெருமாள் பரிவட்ட மரியாதை அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !