காஞ்சிபுரம் கணம்புல்ல நாயனார் குருபூஜை விமரிசை
ADDED :2544 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கணம்புல்ல நாயனார் குருபூஜை விழா நடந்தது.கார்த்திகை மாதம் , கிருத்திகை நட்சத்திரத்தில், இருக்குவேளூரில் அவதரித்தவர்
கணம்புல்ல நாயானார். இவர், 63 நாயன்மார்களில் ஒருவர், திருப்புலீச்சுரம் சிவாலயத்தில், விளக்கேற்றி சிவனடியார்களுக்கு தொண்டாற்றியவர்.வறுமை காரணமாக, கணம்புல்லைக் கொண்டு விளக்கு ஏற்றி வந்தார். கணம்புல் கிடைக்காத நிலையில், தன் தலை முடியை விளக்காக எரித்து, சிவபெருமான் சன்னிதி ஒளிபெற செய்தார்.இவரது, குருபூஜை விழா, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 23ல்) நடந்தது.
விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, அறுபத்து மூவர் குருபூஜை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.டிச.,1ல், மெய்பொருள் நாயனார் குரு பூஜை விழா நடைபெறுகிறது.