கூடலூர் மங்களநாயகி கண்ணகி கோயிலில் பிரதிஷ்டை விழா
ADDED :2605 days ago
கூடலூர்:சுருளியாறு மின்நிலையம் ரோட்டில் உள்ள மங்களநாயகி கண்ணகி கோயிலில் புதிதாக லட்சுமிவிநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.இதற்கு புனித நீர் தெளித்து பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று 27ல், நடந்தது. முன்னதாக சிறப்பு யாக பூஜை, பூஜாரி கந்தவேல் தலைமையில் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை கார்த்திகேயன், முத்தையா, ராஜேஸ்வரன், சமூகஆர்வலர் ஜோசப் செய்திருந்தனர்.