அலங்காநல்லூரில் சந்தனக்கூடு திருவிழா
ADDED :2519 days ago
அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் அருகே அய்யூரில் அரபு மஸ்தான் சந்தனக்கூடு கொடிமர திருவிழா நடந்தது.தர்ஹாவிற்கு சொந்தமான சந்தனக்கூடு கொடிமரம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவோரின் கொடிமரங்கள் பள்ளி வாசலுக்கு வரவழைக்கப்பட்டன.
சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் கொடிமரங்கள் அலங்கரிக்கப்பட்டன. பின் ஒயிலாட் டம் மற்றும் வாணவேடிக்கைகளுடன், மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது. ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் செய்தனர்.