திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2694 days ago
திருத்தணி: திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதே நேரத்தில், உற்சவர் சுந்தர விநாயகருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாக உட்புறத்தில், மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதே போல், திருத்தணி நகரில் உள்ள விநாயகர் கோவில்களிலும், சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.