உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் குருந்தம்பட்டு கண்மாயில் பிரமதேயக் கல்வெட்டு

திருப்புத்தூர் குருந்தம்பட்டு கண்மாயில் பிரமதேயக் கல்வெட்டு

திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே குருந்தம்பட்டு பனையடிக் கண்மாயில் கி.பி.17ம் நூற் றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு இருப்பது வரலாறு ஆய்வில் தெரியவந்தது.

குருந்தம்பட்டுக் கண்மாயில் துணி துவைக்க ஒரு பட்டியல் கல்லை கிராமத்தினர் பயன் படுத்தி வருகின்றனர். அதில் சில எழுத்துக்கள் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து காரைக் குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், மாணவர் அரவிந்தன் ஆகியோர் கள ஆய்வு நடத்தினர். குரு அப்போது துணி துவைக்கும் கல்லில் உள்ள எழுத்துக்களைப் படியெடுத்தனர். இந்த கல் ஒரு கல்வெட்டின் உடைந்த கீழ்ப் பகுதி என்பது தெரிந்தது. இதனால் கல்வெட்டில் மன்னர், சரியான காலம்,இடம் குறித்து சரியாக அறிய முடியவில்லை. இருப்பினும் கல்வெட்டில் பல தகவல்கள் தெரியவந்தது. இது 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயம் கல்வெட்டு என்பதும், மன்னன் கண்மாய் வெட்ட பிராமணருக்கு தர்மம் கொடுத்ததும், காவிரியும், புல் பூமியும், சந்திர சூரியன் உள்ளவரை இத்தர்மம் நிலைத்திருக்கும் எனவும், இத்தர்மத்திற்கு கேடு நினைப்போர் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வூரில் உள்ள ஒரு கண்மாயை பிரானிக் கண்மாய், வயலை பிரானி வயல் என்று கிராமத்தினர் அழைக்கின்றனர்.

இக்கண்மாய்க்குத் தான் பிரமதேயம் வழங்கப்பட்டிருக்கும், காலப்போக்கில் பிராமணி கண்மாய், பிராமணி வயல் காலப்போக்கில் மருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது வரை திருப்புத்தூர் பகுதியில் கிடைத்த பிரமதேயக் கல்வெட்டுக்களில் பழமையானது பூலாங்குறிச்சி மலைச் சரிவில் உள்ளதாகும். அது கி.பி.,5ம் நூற்றாண்டுக்கு முந்தையது ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !