குச்சனூர் கோயிலில் கார் பார்க்கிங் அமைக்கப்படுமா?
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட இடத்தில் கார் பார்க்கிங் வசதி செய்து தர சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின் றனர்.குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. பரிகார தலமாக இருப்பதால் வாரத்தின் சனியன்று ஏராளமான பக்தர்கள் தோஷ நிவர்த்திக்கு வருகின்றனர். இவர்களின் வாகனங்களை கோயில் வளாகத்தில் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால், ரோட்டிலேயே நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு நிலம் கடந்தாண்டு மீட்கப்பட்டது. இதிலிருந்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டு விட்டன. மீட்கப்பட்ட இடத்தில் கார் பார்க்கிங் அமைத்தால், பக்தர்கள் சிரமமின்றி வாகனங்களை நிறுத்த முடியும், என்ற னர்.அறநிலையத்துறையினர் கூறுகையில், கோயில் வளாகத்தில் இருந்த ஆக்கிரமிப்பில் ஒரு பகுதி மீட்கப்பட்டாலும், ரோட்டோரமாக உள்ள கடைக்காரர்கள் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் விரைவில் தீர்வு கிடைக்கும், என்றனர்.