உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பை பால திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் மகா யாகம்

இரும்பை பால திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் மகா யாகம்

புதுச்சேரி: பைரவர் அவதரித்த தினத்தையொட்டி, இரும்பை பால திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், மகா யாகம் நடந்தது. புதுச்சேரி அடுத்த இரும்பை குபேரர் நகரில் (டோல்கேட் அருகே), பால திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் அமைந்துள்ளது. பைரவர் அவதரித்த தினத்தையொட்டி, இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஷேத்திரபால பைரவர், ஜென்மாஷ்டமி அஷ்ட பைரவர் மகா யாக பெருவிழா நேற்று நடந்தது. மாலை 4:00 மணிக்கு அஷ்ட பைரவர் பூஜையும், மகா யாகமும் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், கலசாபிஷேகமும், இரவு, பைரவர் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்தது. கணேஷ் குருக்கள் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !