காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் லட்ச தீபம்
ADDED :2546 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், வரும், 10ல், லட்சதீப திருவிழா நடைபெறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், நான்காவது வார சோமவார தினத்தன்று, லட்சதீப திருவிழா நடத்தப்படுகிறது.அதன்படி, நான்காவது வாரமான, வரும், 10ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு லட்சதீப திருவிழா நடைபெற உள்ளது.விழாவையொட்டி, சுவாமிக்கு மஹா அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.