உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்திமலை கோவிலில் வரும் 20ல் மகா சிவராத்திரி விழா

திருமூர்த்திமலை கோவிலில் வரும் 20ல் மகா சிவராத்திரி விழா

உடுமலை :உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவிலில், மகா சிவராத்திரியையொட்டி, வரும் 20ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.விழாவையொட்டி, வரும் 19ம் தேதி இரவு 8.00 மணிக்கு பூலாங்கிணறு பகுதியில், திருச்சப்பர பூஜையும், 20ம் தேதி மாலை 4.00 மணிக்கு திருச்சப்பரம், பூலாங்கிணரிலிருந்து கோவில் வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8.00 மணிக்கு புண்யாகவாசனம், முதல்கால பூஜை, அபிஷேகம், தீபாராதனையும்; இரவு 10.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அபிஷேகமும்; 21ம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அபிஷேகமும், அதிகாலை 4.00 மணிக்கு நான்காம் கால பூஜை, அபிஷேகம், அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், 16 தீப தரிசனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, பாட்டும், பரதமும், பேச்சு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. கடத்தூர்: உடுமலை அருகே கடத்தூர் கோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில், வரும் 20ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாவையொட்டி, மாலை 6.00 மணி முதல் வரும் 21ம் தேதி வரை காலை 6.00 மணி வரையும் நான்கு யாம பூஜையும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !