கடலூர் திருமணத் தடை நீங்க பார்வதி ஜப ஹோமம்
ADDED :2542 days ago
கடலூர்:கடலூரில், திருமணத் தடை நீங்க சுயம்வர பார்வதி ஜப ஹோமம் நடந்தது.கடலூர் மஞ்சக்குப்பத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர பார்வதி ஜப ஹோமம், குழந்தை பாக்கியம்
வேண்டி புத்ர காமேஷ்டி யாகம் நேற்று (டிசம்., 2ல்) நடந்தது. இதனையொட்டி கணபதி ஹோமம், சங்கல்பம், பூர்ணாகுதி நடந்தது.
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நிகழ்ச்சிக்கு சங்கர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அருணாசலம், டாக்டர் நாராயணன், அரிமா சங்க முன்னாள் தலைவர் திருமலை முன்னிலை வகித்தனர். ஹோமத்தில் முன்னாள் கவுன்சிலர் சங்கர், கனகசபை உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சிவாச்சாரியார்கள் தண்டபாணி, நாகராஜ் தலைமையில் ஹோமம் நடந்தது. ஏற்பாடுகளை கணபதி சிவாச்சாரியார், சக்திசாய், சுந்தரமூர்த்தி, முத்தையா, சேதுமாதவன் செய்திருந்தனர்.