திண்டிவனத்தில் விஜயேந்திரருக்கு வரவேற்பு
ADDED :2611 days ago
திண்டிவனம்: திண்டிவனத்திற்கு வந்திருந்த காஞ்சி சங்கர மடத்தின் விஜயேந்திர சுவாமிக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.காஞ்சி சங்கரமட மடாதிபதி
விஜயேந்திர சுவாமி, திருவானைக்காவலில் நடைபெறும்
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நேற்று (டிசம்., 2ல்) மாலை காஞ்சிபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டார். இரவு 7:15 மணிக்கு திண்டிவனத்திற்கு வருகை தந்த விஜயேந்திரருக்கு மரக்காணம் பிராமணர் சங்க தலைவர் சீனுவாச அய்யர் தலைமையில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதில், ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில் செயல்படும் காமகோடி திரிவேணி பாடசாலை மாணவர்கள், திண்டிவனம் பிராமணர் சங்க நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .