ஈரோடு அமல அன்னை ஆலய திருவிழா தொடக்கம்
ADDED :2596 days ago
ஈரோடு: புனித அமல அன்னை ஆலயத்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் அமைந்துள்ள, புனித அமல அன்னை ஆலய, ஆண்டு திருவிழா, கொடியேற்ற நிகழ்வுடன், நேற்று (டிசம்., 2ல்) தொடங்கியது.
கோவை இளம் குருமட அதிபர் ஆரோக்கியசாமி, திருப்பலி நடத்தினார். வரும், 6ல் பங்குத்தந்தை ஆரோக்கிய யூதா ததேயூ தலைமையில் சிறப்பு திருப்பலி, 7ல் தேர் சுற்றி வேண்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு திருப்பலி, ஆடம்பர கூட்டுப்பாடல், 9ல் தேர்பவனி நடக்கவுள்ளது.