உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் பள்ளியில் ஐயப்ப மாணவருக்கு தடை: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரத்தில் பள்ளியில் ஐயப்ப மாணவருக்கு தடை: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்:ஐயப்பனுக்கு மாலை அணிந்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்ததால் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் அக்காள்மடம் புனித அன்னாள் மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் நம்புகமலேஷ்,14. தந்தையுடன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். நேற்று (டிசம்., 3ல்) ஷூ அணியாமல் பள்ளிக்கு சென்ற மாணவரை, பள்ளி நிர்வாகம் அனுமதிக்காமல் வெளியேற்றியது.

இதனைக் கண்டித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் பலரும் பள்ளி முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின் போலீஸ் டி.எஸ்.பி.,மகேஷ் சமரசம் செய்தார்.

இதுகுறித்து பாம்பன் போலீசில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். ஆனால் பள்ளியில் அத்துமீறி நுழைந்ததாக இந்து முன்னணியினர் மீது மற்றொரு தரப்பு மாணவர்களின் பெற்றோரும் புகார் அளித்தனர்.

அலட்சியம்: பள்ளியில் மாணவரை வெளியேற்றியதும் முதலில் பாம்பன் போலீசில் இந்து முன்னணி சார்பில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் விசாரிக்காமல் அலட்சியமாக இருந்ததால்,அடுத்தடுத்து இருதரப்பினரும் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !